Friday, November 2, 2012

ப்ராக்கலி பொரியல்

ப்ராக்கலி பொரியல்


அவசியமான பொருட்கள் :

ப்ராக்கலி பூக்கள் - 2 கப்
வெங்காய‌ம் - 1
தேங்காய்பூ துருவ‌ல் - 2 மேசைக்க‌ர‌ண்டி
உப்பு - ‍சுவைக்கேற்ப‌
தாளிக்க: 
கடுகு - அரை தேக்கரண்டி
கடலை,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த‌‌ மிள‌காய் - 4
பெருங்காயத்தூள் - சிறிது
க‌றிவேப்பிலை - சிறிது
எண்ணெய்‍ - தாளிக்க
செய்முறை:


ப்ராக்கலியை நறுக்கி தண்ணீரில் அலசி நன்கு தண்ணீரை வடித்து விடவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான‌தும், க‌டுகு,கடலை,உளுத்தம்பருப்பு, காய்ந்த‌‌ மிள‌காய், க‌றிவேப்பிலை, பெருங்காய‌த்தூள் சேர்த்து தாளிக்க‌வும். பிற‌கு‌ ந‌றுக்கி வைத்த‌ வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும், ப்ராக்க‌லி பூக்க‌ளை சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு வேக விடவும்


க‌டைசியாக‌ தேங்காய்ப்பூ துருவ‌லை சேர்த்து, கிள‌றிவிட்டு இற‌க்க‌வும்.
எளிதில் செய்யக்கூடிய ப்ராக்கலி பொரியல் ரெடி.

குறிப்பு:

இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.








No comments:

Post a Comment