Thursday, November 8, 2012

Egg Curry

 

முட்டை தொக்கு


அவசியமான பொருட்கள் : 

முட்டை - 3
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

 

செய்முறை:


வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

முட்டை வேக வைத்து  வைக்கவும்.  அதனை தோல் உரித்து  பாதியாக வெட்டி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு  வெங்காயம்,  பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.


பின்னர் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வேகவிடவும். தண்ணீர் ஊற்றாமல் குறைந்த தீயில் வதக்கவும்.
நன்கு வதக்கி எண்ணெய் மிதந்து வந்தவுடன் முட்டையை அதில் சேர்த்து கிளறவும்.(முட்டை மஞ்சள்கரு வெளியில் வராதவாறு கிளற வேண்டும்)


பின் மல்லி தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டா, நாண்னுக்கு நல்ல காம்பினேஷன். சாதத்துடன் பிசைந்தே அல்லது சாம்பார், ரசம், தயிர் உடனோ சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:


முட்டையை அதில் சேர்க்கும் முன் விருப்ப பட்டால் வெங்காயம், தக்காளி கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து சேர்கவும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment