Sunday, November 4, 2012

அடை


அடை 


 

அவசியமான பொருட்கள் :

 
அரிசி - 1 கப்
உளுந்துபருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு‍ - 1/2 கப்
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்)
சீர‌க‌ம் -‍ 1 தேக்க‌ர‌ண்டி
சோம்பு - 1 தேக்க‌ர‌ண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

 
தேவையான அனைத்து பொருள்களையும் எடுத்து வைக்கவும்.
 
அரிசி, ருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து‌, ன்கு ழுவி எடுத்து, மிளகாய் வத்தல் ,சீரம் ,சோம்பு சேர்த்து மூழ்கும் அ‌ளவு ண்ணீர் சேர்த்து குறைந்தது 3லிருந்து 4 ணி நேரம் ஊறவிடவும்.
 
 
 
ஊறவைத்த அரிசி, ப‌ருப்புபை உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு த‌ண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள‌வும்.அவற்றுடன் சீர‌க‌ம் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் சேர்க்கவும்.
 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாகியதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தேய்த்து மேலே எண்ணெய் ஊற்றவும்.

 
நன்கு வெந்ததும், அடையை திருப்பிபோட்டு, அடுத்த பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.சூடாகரிமாறலாம்
 
 
இதற்கு தேங்காய் சட்னி ,சாம்பார், மற்றும் க்காளி தொக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
 
 
குழந்தைகளுக்கு வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைமற்றும் தேங்காய் சேர்க்காமல் அப்படியேவும் ஊற்றிகொடுக்கலாம்.தக்காளி சாஸ்யுடன் குடுக்க விரும்பி உண்பார்கள்.
 

குறிப்பு: 

குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஆரேக்கியமான உணவு இது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment