Wednesday, October 31, 2012

ஈசி சிக்கன் கறி

ஈசி சிக்கன்  கறி


அவசியமான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
 வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு.
 

செய்முறை: 

 
 
 சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டவும்.  வெங்காயம், தக்காளியை  பொடியாக நறுக்கவும்
 
 
எண்ணெய் தவிர சிக்கனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். உடனே செய்தாலும் நன்றாக இருக்கும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்.
 
 
ஊற வைத்த சிக்கனை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
 
 
மூடி வைத்து நன்கு வேக விடவும். தேவை யென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
 
 
மல்லிதழை தூவி பரிமாறவும்.இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் மற்றும் ஆப்பத்துடன்னும் சாப்பிடலாம்.
 

 

குறிப்பு:

 
இது ஈசி ஆனது மட்டும் அல்ல சுவையானதும்,ஆரோக்கியமானதும் கூட.
காலையில் சிக்கனை தயார் செய்து ப்ரிஜில் வைத்து விட்டு மாலையில் சமைக்கலாம் (சமைப்பதர்க்கு 1/2 மணி நேரம் முன்பு எடுத்து வெளியே வைத்துவிடவும்).
 நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Tuesday, October 30, 2012

தக்காளி தொக்கு

 தக்காளி தொக்கு


அவசியமான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


தாளிக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
கறிவேப்பிலை - 5,
எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை: 

 
 
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,பட்டை ,லவங்கம் 
கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும்.

 
  வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய் தூள் , மல்லித் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும்.

 
தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து, மூடி  போட்டு வேகவைக்கவும்.
தக்காளி நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும்.

 
 மல்லித் தழை தூவி பரிமாறவும்.
 

குறிப்பு:

சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
இதை சாதத்துடனும் சாப்பிடலாம்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


Monday, October 29, 2012

மசாலா அவல் பஜ்ஜி

மசாலா அவல்  பஜ்ஜி


அவசியமான பொருட்கள் :

மசாலா அவல் - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காய பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
மசாலா அவல் செய்வது பற்றி முந்தைய குறிப்பை பார்க்கவும்.


கடலை மாவு , மிளகாய் தூள் , உப்பு ,பெருங்காய பொடி - சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மசாலா அவல்லை உருண்டையாக உருட்டி வைக்கவும்.

உருண்டைகளை மாவில் தேய்த்து காய வைத்த எண்ணெயில் போடவும் .


சிவக்க வேக வைத்து எடுக்கவும். சுவையான பஜ்ஜி தயார்.




குறிப்பு:

தேங்காய் சட்னி உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
வித்தியாசமான பஜ்ஜி இது.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.




Sunday, October 28, 2012

உ ப பாயாசம்

உளுத்தம் பருப்பு பாயாசம்

 

அவசியமான பொருட்கள் :

அரைத்த உளுத்தம் பருப்பு - ஒரு கப்
சக்கரை - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி பருப்பு - 6
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

 
 

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊரவைக்கவும்.பின்பு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
 
ஒரு கடாயில்  நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 

அரைத்த உளுத்தம் பருப்பை தண்ணிர் விட்டு கரைத்து சிறிய தீயில் கொதிக்க வைக்கவும்.விடாமல் கிளறி கொன்டே இருக்கவும்.
 

நன்கு கொதித்ததும்.சக்கரை சேர்க்கவும்.பின்பு தேங்காய்,முந்திரி,திராட்சை  மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
 

சூடாகவோ அல்லது ஜில்லென்றே பரிமாறவும்.



குறிப்பு:

உளுத்தம் பருப்பில் புரதசத்து இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோர்க்கும் ஏற்றது.கைவிடாமல் சற்று கவணத்துடன் கிளரவும் இல்லை யென்னில் அடிபிடித்து விடும்.
தேங்காய் துருவல்லுக்கு பதில் தேங்காய்யை நறுக்கி போட்டால் வித்தியாசமாக இருக்கும்.
இந்த வித்தியாசமான பாயாசத்தை செய்து பார்த்து மகிழுங்கள்.
உங்கள் கருத்தை மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.
 






கத்திரிக்காய் குழம்பு

கத்திரிக்காய் குழம்பு

 

அவசியமான பொருட்கள் :

கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
 

தாளிக்க:

கடுகு - 1/4  தேக்கரண்டி
 சோம்பு -  1/4  தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
பட்டை - 1
லவங்கம் - 2
உளுந்து, கடலை பருப்பு - 1/2  தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் வற்றல் - 3
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

சோம்பு -  ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்

 

செய்முறை:


 
 
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  கத்திரிக்காயை நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
 
 
தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 
கத்திரிக்காயை சேர்த்து உடையாமல் வதக்கவும்.
 

 தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்
 

 
புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
 

 
உப்பு மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து கொதிக்க விடவும்.
 

 அதன் பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.
 
 
 

குறிப்பு:

சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.அப்பளம், வறுத்த முட்டை,வறுவல்களுடன்னும் சேர்த்து சாப்பிடலாம்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.




Saturday, October 27, 2012

தோசை

தோசை


அவசியமான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 
அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு,  ஒன்றாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 

பச்சரிசி, புழுங்கலரிசி,வெந்தயத்தை ஒன்றாகவும்,  உளுத்தம் பருப்பை தனியாகவும் ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 4 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
 

முதலில் அரிசியை நன்றாக நற, நறவென்று அரைக்க வேண்டும்.
 

பின்பு உளுத்தம்பருப்பை போட்டு பொங்க பொங்க நைசாக அரைக்கவும்
(முதலில் உளுத்தம் பருப்பை அரைத்தால் அது உறைந்து விடும்.)


அரைத்து வைத்ததை ஒரு பாத்திரத்தில்  போட்டு உப்பு சேர்த்து நன்றாக கைவிட்டு  கலக்கவும்.கந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.


10 முதல் 12 மணி நேரம் புளிக்கவைக்கவும்.கோடை காலத்தில் 6 முதல் 8மணி நேரத்தில் புளித்துவிடும்
 
 
தேவை பட்டால் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
 

தோசை கல்லை சூடு செய்து.அடி அகலமான கரண்டியில் மாவை தேய்க்கவும்.
 

மேலே எண்நெய் அல்லது நெய் ஊற்றி திருப்பி போடவும்.

 
சூடாக பரிமாரவும்.சட்னி,சாம்பார்,கோழிக் குழம்பு,கறி குழம்பு,பொடி, குருமா இப்படி எதன் உடன்னும் சாப்பிட அருமையாக இருக்கும்.

 
 
குறிப்பு:
மாவை அரைத்து ப்ரிஜில் வைத்து 10 நாட்கள் வரை உபயேகிக்கலாம்.மாவு புளித்து விட்டால் சிறிது ரவை கலந்து தோசை ஊற்றலாம் அல்லது வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்து தோசை ஊற்றலாம் .

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


Thursday, October 18, 2012

தேங்காய் பருப்பு போளி

 தேங்காய் பருப்பு போளி


அவசியமான பொருட்கள் :

மைதா மாவு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு
தண்ணீர்  - தேவையான அளவு


செய்முறை:




 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
 
 
கடலை பருப்பு நன்றாக வெந்த பிறகு தண்ணீரினை வடித்து சிறிது நேரம் காய விடவும். சர்க்கரை, தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி  சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
 

பிசைந்து வைத்த மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி  வைக்கவும்.
 
 

அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைக்கவும்.
 

வைத்து நன்கு மூடவும்.



கையில் நன்கு மெல்லிதாக தட்டவும்.
 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒருஸ்பூன் நெய் ஊற்றி போளியைப் போடவும். ஒருபுறம் சிவந்ததும்  மறுபுரம் திருப்பி, மீண்டும் ஒருஸ்பூன் நெய் விட்டு வேகவிடவும்

 

இப்போது சுலபமான சுவையான போளி தயார்.

குறிப்பு:
குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி இது.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Wednesday, October 17, 2012

தக்காளி சாதம்

தக்காளி சாதம்


அவசியமான பொருட்கள் :


பாஸ்மதி அரிசி - 1 கப்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2  தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி,புதினா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
 

தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
நெய்  அல்லது எண்ணெய்  - தேவையான அளவு
செய்முறை:
 
 
அரிசியை கழுவி 10  நிமிடம் ஊற வைக்கவும்.
தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

 
ஒரு வாயகன்ற சட்டியில் நெய் விட்டு,தண்ணீரை வடித்து விட்டு அரிசியை போட்டு உடையாமல்  வறுக்கவும்.

  
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.


பின் வெங்காயம் பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் , இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 

புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.



அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.


பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்,தண்ணீர் 1 கப் சேர்க்கவும்.
 

தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி விடவும் .1 விசில் வந்நதும் அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைக்கவும்.


விசில் அடங்கியதும் சாதத்தை கலந்துவிடவும்.
விருப்ப பட்டால் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
 


 


குறிப்பு:
இத்துடன் தயிர் பச்சடி, உருளை கிழங்கு தக்காளி தொக்கு, வேகவைத்த முட்டை அல்லது அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.