Tuesday, November 13, 2012

Sundal

கொண்டைக்கடலை சுண்டல்  


அவசியமான பொருட்கள் :

கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - 1
கொத்த மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:

கடுகு - தாளிப்பதற்கு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - மூன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
முந்திரி - சிறிது
எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2

செய்முறை:  



கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும்.அரைக்க வேண்டிய வற்றை அரைத்துக் கொள்ளவும்.


 குக்கரில் கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக வைக்கவும்.



கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து பொன் நிறம்மாக வதக்கவும்.


பின் அரைத்த வற்றை சேர்த்துக் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதன் பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும். கொத்த மல்லி இலை தூவி பரிமாறவும்.


குறிப்பு:

சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment