Sunday, November 4, 2012

சோயா தொக்கு

சோயா தொக்கு

 

 அவசியமான பொருட்கள் :

 
சோயா - ஒரு கப்
வெங்காயம்  - ஒன்று
தக்காளி - 2 அல்லது 3 
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது -  1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 

செய்முறை:

 
 
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
 
சோயா உருண்டை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கழித்து, உருண்டைகளிலுள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பின்பு அதை நீள துண்டுகளாக நறிக்கி கொள்ளவும்.
 
 
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு, சோம்பு தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
 
அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
 
 
தக்காளி வதங்கியவுடன் உப்பு மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

 
அடுத்து சோயாவை சேர்த்து சிறிது நேரம் கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். பின் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


 
 
இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்,காளான் பிரியாணி ,புலாவ்வுடன்னும்,சாம்பார், ரசம், தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.


குறிப்பு:

இது சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment