Friday, November 2, 2012

Mushroom Biryani

காளான் பிரியாணி


தேவையான   பொருட்கள் :

 காளான் - 2 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
   சோம்பூ - 1 ஸ்பூன்
பட்டை - இரண்டு
லவங்கம் - நான்கு
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்ஜி பூண்டு விழுது -  2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞசள் தூள் - 1/4  தேக்கரண்டி
கொத்தமல்லி ,புதினா - ஒரு கப்
பச்சை மிளகாய் - 1

செய்முறை: 



காளானை கழுவி வெட்டி வைக்கவும்.வெங்காயம் தக்காளியை நீளமாக மெலிசாக வெட்டி வைக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். கொத்தமல்லி ,புதினா மற்றும் பச்சை மிளகாய்யை அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாயகன்ற சட்டியில் நெய் விட்டு,தண்ணீரை வடித்து விட்டு அரிசியை போட்டு உடையாமல் வறுக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பூ, பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பின் தக்காளியை  வதக்கி அரைத்த வற்றை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு எல்லா தூள் வகைகளையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் காளான், உப்பு சேர்த்து வதக்கவும்.

1 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும், ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்ல வைத்து 5 நிமிடத்துக்கு பின் அனைத்துவிடவும்.

குறிப்பு:

இதன் உடன் ரயித்தா, சோயா தொக்கு, அப்பளம் சேர்த்து சாப்பிடா அருமையாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.












No comments:

Post a Comment