Tuesday, October 16, 2012

உ.கிழங்கு தொக்கு

உருளை கிழங்கு தக்காளி தொக்கு

 
அவசியமான பொருட்கள் :
உருளை கிழங்கு - 2
தக்காளி - 2
வெங்காயம்-1
தனியாதூள் - 2 தேக்கரண்டி
 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 கரம் மசாலா -  1 தேக்கரண்டி
இஞ்சி ,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  கொத்தமல்லிதழை -சிறிது
  உப்பு - தேவையான அளவு
                                                    

தாளிக்க:

சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
                       உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
                  கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கருவேபில்லை - சிறிது
               எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

  
 
வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
 
உருளை கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து தோல் உரித்து  ஒரே அளவில் நறுக்கி வைக்கவும்.

 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த வற்றை தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.

 

 
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். 


அடுத்து அனைத்து தூள்களையும் உப்பையும் போட்டு நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
 
 
பின்பு உருளை கிழங்கை சேர்த்து நன்கு கலந்து, மூடி போட்டு வேகவைக்கவும்.
 
 
கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.
 
குறிப்பு:
இந்த உருளை கிழங்கு தக்காளி தொக்கு செய்வது ரொம்ப சுலபம்.
தயிர் சாதம்,ரசம் சாதம்,சாம்பார் சாதம் மற்றும் சப்பாத்தி  உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
புலாவ்வுடன்னும் அருமையாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment