Monday, October 15, 2012

தக்காளி குருமா

தக்காளி குருமா

அவசியமான பொருட்கள் :

வெங்காயம் - 1
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது - கால் கப்
உப்பு
 

தாளிக்க:

பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய்
 

அரைக்க:

 தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரைத் தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
 

 செய்முறை:

 


வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
 
 
அரைக்க கொடுத்ததை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆர வைத்து பின்பு 1 தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 

அடுத்து  தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு மற்றும் தூள் வகை எல்லாம் சேர்த்து குழைந்து வரும் வரை வதக்கவும்.
 
 
அரைத்ததை ஊற்றி தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.குருமா கெட்டியானதும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
 
 
 இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
 
 

குறிப்பு:

 
தக்காளி நன்றாக பழுத்த இருந்தால் சுவை நன்றாக இருக்கும். கசகசா  அரைக்கும் முன் அதை சுடுநீரில் ஊறவைத்தோ அல்லது வறுத்து அரைத்தால்லோ நன்கு மைய அரைப்படும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment