Tuesday, October 9, 2012

மீன் குழம்பு

மீன் குழம்பு


அவசியமான பொருட்கள் :

சுத்தம் செய்த மீன்- அரை கிலோ
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப

கரைக்க:

தக்காளி-1 (சிறியதுஎன்றால் 2 முதல் 3)
 புளி - தேவைக்கு ஏற்ப
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
தனியா தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

 தாளிக்க:

சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய்

அரைக்க:

தேங்காய் பூ - 1/4 கப்

  செய்முறை:

 













வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தை சூடு செய்து. எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து.
வெங்காயம் சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வதக்கவும் 
கரைக்க கொடுத்தவற்றை கரைத்து வைக்கவும்.

கரைத்தவற்றை  ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
மீன் துண்டுகளை போட்டு இரண்டு கொதி விடவும்.
அரைத்தவற்றை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
இந்த மீன் குழம்பை இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
அடுத்த நாள் சூடு செய்து சாப்பிட அருமையோ அருமையாக இருக்கும்.


செய்து பார்த்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment