தக்காளி தொக்கு
அவசியமான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
கறிவேப்பிலை - 5,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,பட்டை ,லவங்கம்
கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய் தூள் , மல்லித் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து, மூடி போட்டு வேகவைக்கவும்.
தக்காளி நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும்.
தக்காளி நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும்.
மல்லித் தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு:
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
இதை சாதத்துடனும் சாப்பிடலாம்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இதை சாதத்துடனும் சாப்பிடலாம்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment