Monday, October 15, 2012

மசாலா அவல்


மசாலா அவல்

அவசியமான பொருட்கள் :

அவல் - 1 கப்
வெங்காயம் - 1 (சிறியது என்றால்  2)
தக்காளி -1 (சிறியது என்றால் 2)
குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
உருளை கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான் அளவு
 தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு,உளூத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
 எண்ணெய் - தேவையான் அளவு

செய்முறை:

  

வெங்காயம் , தக்காளி ,குடைமிளகாய், பச்சை மிளகாய் அகியவற்றை
பொடியாக நறுக்கிகொள்ளவும்.உருளை கிழங்கை வேகவைத்து சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.


அவல்லை ஊற வைத்து,வடிகட்டீ வைக்கவும்.


எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடு்த்தவற்றை தாளிக்கவும்.வெங்காயம், பச்சை மிளகாய்  போட்டு வதக்கவும்.


பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் ,உப்பு  சேர்த்து  சுருண்ட வதக்கவும்


உருளை கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.

அடுத்து அவல் சேர்த்து நன்கு கிளறவும்.


அடுத்து குடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.


தீயை குறைத்து ஒரு 5 நிமிடம் வைக்கவும்.
அடிபிடிக்காமல் இருக்க நடுவில் கிளறிவிடவும்.


கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்.


குறிப்பு:
இது ஒரு வித்தியாசமான சிற்றுண்டி.
செய்து பார்த்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment