Monday, October 15, 2012

தந்தூரி சிக்கன்

.

தந்தூரி சிக்கன்

அவசியமான பொருட்கள் :

கோழி - ஒரு கிலோ 
 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 மல்லி தூள் - 2 தேக்கரண்டி
சீரகதூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
 எலுமிச்சை சாறு -  1/2
கஸ்தூரி மேத்தி - சிறிது
 உப்பு
தயிர் - 1/2 கப்
 எண்ணெய் - 1 தேக்கரண்டி

விரும்பினால்:

வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
ரெட் கலர் பொடி - 1 சிட்டிகை
 சாட்மசாலா - சிறிது

செய்முறை:

 
 
கோழியை சுத்தம் செய்து கத்தியால் ஆழமாக கோடு போடவும்.நீரைபிழிந்து விடவும். தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீரை வடிக்கவும். வெங்காயம் மற்றும் குடைமிளகாய்யை நீளவாக்கில் நறுக்கவும்.

எலுமிச்சை சாறுடன் தூள் வகைகள்,கோழி, இஞ்சி பூண்டு விழுது,கஸ்தூரி மேத்தி , உப்பு ,தயிர், ரெட் கலர் பொடி, எண்ணெய் எல்லாம் கலந்து ஊற விடவும்.குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஊற வேண்டும்.


அவனை 450°F அல்லது 232°C யில் சூடு  செய்யவும்.
அவன் பாத்திரத்தில் கோழியை நன்கு பரப்பி வைக்கவும்.


அவன் சூடு ஆனதும், கோழியை உள்ளே வைக்கவும்.
25 முதல் 35 நிமிடத்துக்கு வேகவிடவும்.

 
 

10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும்.

கோழி நன்கு வெந்தவுடன்.நறுக்கிய வெங்காயம் ,குடைமிளகாய்யை  சேர்த்து கலந்து அவனில் ஒரு 10 நிமிடத்துக்கு வைக்கவும்.
விரும்பினால் சாட்மசாலா தூவி பரிமாறவும்.





குறிப்பு:
இதை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டும்மாணால் புலாவ் போன்ற வற்றுடண்ணும்  சாப்பிடலாம்.
கஸ்தூரி மேத்தி என்பது காயவைத்த வெந்தய கீரை தான்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்


No comments:

Post a Comment