Thursday, October 18, 2012

தேங்காய் பருப்பு போளி

 தேங்காய் பருப்பு போளி


அவசியமான பொருட்கள் :

மைதா மாவு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு
தண்ணீர்  - தேவையான அளவு


செய்முறை:




 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
 
 
கடலை பருப்பு நன்றாக வெந்த பிறகு தண்ணீரினை வடித்து சிறிது நேரம் காய விடவும். சர்க்கரை, தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி  சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
 

பிசைந்து வைத்த மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி  வைக்கவும்.
 
 

அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைக்கவும்.
 

வைத்து நன்கு மூடவும்.



கையில் நன்கு மெல்லிதாக தட்டவும்.
 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒருஸ்பூன் நெய் ஊற்றி போளியைப் போடவும். ஒருபுறம் சிவந்ததும்  மறுபுரம் திருப்பி, மீண்டும் ஒருஸ்பூன் நெய் விட்டு வேகவிடவும்

 

இப்போது சுலபமான சுவையான போளி தயார்.

குறிப்பு:
குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி இது.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment